Disaster Management Mock Drills Conducted at Mudichur Village Lake, Chengalpattu District
Publish Date : 11/10/2021
முடிச்சூர் கிராமம் பெரிய ஏரியில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளாக மீட்புக்குழுவின் செயல்பாடுகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்திட ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ADGP.திரு.அமல்ராஜ், IGP.திரு.சுமித் சரண், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை மீட்புப் பணித்துறை இயக்குநர் திரு சுப்பையன். I.A.S. மாவட்ட ஆட்சியர் A.R.Rahul Nadh I.A.S. செங்கல்பட்டு மாவட்ட காவல்துறை SP திரு.விஜயகுமார்.I.P.S, அதிவிரைவு படை கண்காணிப்பாளர் திரு.செந்தில், தாம்பரம் வருவாய் கோட்டாட்சியர் திரு .ரவிச்சந்திரன், தீயணைப்பு துறையினர், பேரிடர் மீட்பு படையினர், அதிவிரைவு படையினர், வருவாய் துறையினர் மற்றும் ஊர்க்காவல் படையினர் ஆகியோர் கலந்துகொண்டனர்.