மூடு

காணத்தக்க இடங்கள்

செங்கல்பட்டு மாவட்டத்தின் சுற்றுலா இடங்கள்


கந்தசாமி கோயில், திருப்போரூர்

KANDHASWAMY TEMPLE

இக்கோவில் தமிழ்நாட்டிலுள்ள 33 முருகன் கோவில்களில் ஒன்றாகும். பல்லவர் காலத்தில் கட்டப்பட்டது. செங்கல்பட்டில் இருந்து 25 கி.மீ தொலைவில் இக்கோயில் அமைந்துள்ளது. போரியூர், யுதபுரி, சமரபுரி எனப் பெயர்கள் திருப்போரூருக்கு வழங்கப்படுகின்றன. முருகப்பெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோவில் பழைய மகாபலிபுரம் சாலையில் அமைந்துள்ளது. இக்கோயிலில் பல கல்வெட்டுகள் உள்ளன. கோவில் காலை 6.30 மணி முதல் 12.00 மணி வரையிலும், மாலை 4.00 மணி முதல் இரவு 8.00 மணி வரையிலும் திறந்திருக்கும்.


வேதகிரீஸ்வரர் கோவில், திருக்கழுக்குன்றம்

VEDAGIRISWARAR TEMPLE

தினமும் மதியம் வேதகிரீஸ்வரரை வழிபட இரண்டு கழுகுகள் மலைக்குச் சென்று வழிபடும் அரிய நிகழ்வுக்கு இது பிரபலமானது. அதனால் கிராமத்திற்கு திருக்கழுக்குன்றம் என்ற பெயர் வந்தது. சிவன் கோவில் வேதகிரி மலையின் உச்சியில் 160 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. கீழ் ஊரில் ஒரு சிவன் கோயிலும் உள்ளது. நகரின் தென்கிழக்கு முனையில் ஒரு விசாலமான குளம் உள்ளது. அதில் உள்ள நீர் நோய் தீர்க்கும் சக்தியைக் கொண்டுள்ளது. 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை, இந்த குளத்தில் சங்கு தோன்றுகின்றது, இந்த புனித நேரத்தில் குளத்தில் நீராட ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிகின்றனர். லட்ச தீபம் (1 லட்சம் விளக்குகள் ஏற்றுதல்) விழாவும் இங்கு நடைபெறுகிறது. நகரத்தில் உள்ள சிவன் கோயிலில் சங்குகளின் தொகுப்பு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.திருவிடந்தை

திருவிடந்தை

இக்கோயில் சென்னை மற்றும் மாமல்லபுரத்திற்கும் இடையே கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ளது. இக்கோயில் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோயில் ஆகும். இக்கோயிலில் நித்திய கல்யாண பெருமாள் மூலவராக உள்ளார். மேலும் இங்கு அழகிய வராக பெருமாள் அமைந்துள்ளார். திருமணமாகாதவர்கள் இக்கோயிலில் வழிபடுவதால் அவர்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறுவதாக கூறப்படுகிறது.


 

சீனிவாச பெருமாள் கோயில் (செம்மஞ்சேரி)

காஞ்சிபுரம் மாவட்டத்தில் செம்மஞ்சேரியில் அமைந்துள்ள இத்தலம் தற்போது இந்து சமய அறநிலையத்துறையினரால் பராமரிக்கப்பட்டு வருகிறது. இத்தலம் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாக கருதப்படுகிறது. ஆனால் இவ்வூரில் வாழும் மக்கள் இத்தலம் 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்தது என தெரிவிக்கின்றனர். சென்னைக்கு 30 கி.மீ. தொலைவில் பழைய மாமல்லபுரம் சாலையில் இக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் பல்லவ மன்னர்களால் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. பார்வை குறைபாடு உடையவர்கள் வேண்டினால் கண் குறைபாடுகள் நீங்குவதாகவும் திருமணம் ஆகாதவர்கள் மற்றும் குழந்தை பேறு இல்லாதவர்கள் வேண்டினால் அவர்கள் குறை தீர்வதாகவும் கூறுகின்றனர். இக்கோயில் காலை 7.00 மணி முதல 11.00 மணி வரையிலும், மாலை 4.00 மணி முதல் 8.00 மணி வரையிலும் திறந்திருக்கும். தொலைபேசி எண்- 984038836, 9840069650


முதலை வங்கி

முதலை வங்கி

முதலை வங்கி தமிழ்நாடு தலைநகர், சென்னையில் மஹாபலிபுரம் அருகே 44 கிமீ தொலைவில் உள்ளது. இது 3.2 ஹெக்டேர் பரப்பளவில் விரிவுபடுத்தப்பட்டுள்ளது, இதில் பரவலான இந்திய மற்றும் ஆப்பிரிக்க முதலைகள், கடற்பாசிகள் மற்றும் ஆமைகள் மற்றும் பாம்புகள் உள்ளிட்ட பிற ஊர்வனவற்றை உள்ளடக்கியது. இங்கே முதலைகள் அவற்றின் இயற்கையான வாழ்விடங்களில் வைக்கப்படுகின்றன. 1976 ஆம் ஆண்டில் ஜெர்மன் உயிரியலாளரான ரோமுலஸ் வைட்டகரால் நிறுவப்பட்ட இந்த முதலைகள் மற்றும் மூங்கில் வகை இனங்கள் இனங்கள் பாதுகாக்கப்படுவதால், இந்த ஊர்வனவற்றிற்கு ஏராளமான நிழல்களை வழங்குவதற்காக பசுமையான வெப்பமண்டல தாவரங்கள் வழங்கப்படுகின்றன. அதன் நடைமுறையில், முதலைகளின் மொத்த தொகை 30 மட்டுமே. தற்பொழுது, 14 வகையான முதலைகள், 12 பேராசிரியர் ஆமைகள் மற்றும் 5 வகை பாம்புகள் உள்ளன. இவை மொத்தம் 2,400 ஊர்வன வங்கிகளில் உள்ள ஊர்வனவாகும்.
திறக்கும் நேரங்கள்: செவ்வாய் – ஞாயிறு: 7.00 மணி. – 8.30 மணி.
(முன்கூட்டியே முன்பதிவு மட்டும்) தொலைபேசி: +91 -44 27472447


அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா (வண்டலூர்)

வண்டலூர் உயிரியல் பூங்கா

இப்பூங்கா 1976 ஆம் ஆண்டு துவங்கப்பட்டது 1985 ஆம் ஆண்டு பொது மக்கள் பார்வைக்காக திறக்கப்பட்டது. 62 ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்கப்பட்டு தெற்காசியாவிலேயே இப்பூங்கா முதன்மையானதாக திகழ்கிறது. இங்கு 40 வகையான பறவையினங்கள், 14 வகையான ஊர்வனவையும், விலங்கினங்கள் பாதுகாப்பதறக்கான அமைப்பும் செயல்படுகிறது. இங்கு விலங்கினங்கள் ஆராய்ச்சி மற்றும் விலங்கினங்கள் குறித்தான விழிப்புணர்வு போன்றவை இங்கு வரும் சுற்றுலா பயணிகள் மற்றும் பள்ளி மாணவர்களுக்கு விளக்கப்படுகிறது.
பட்டுப்பூச்சி பூங்கா 2.7 ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இங்கு 4 கோடி ரூபாய் மதிப்பில் 200 வகையான வண்ணப்பூக்கள் பூக்கும் தாவர பண்ணை அமைக்கப்பட்டுள்ளது. காலை 9.00 மணி முதல் 5.00 வரை இயங்கும். ஒவ்வொரு செவ்வாய் கிழமை விடுமுறை விடப்படுகிறது. தொலைபேசி எண் 044-22751089


கோவளம்

சென்னையிலிருந்து 40 கி.மீ. தொலைவில் கடலுக்கு அருகாமையில் மாமல்லபுரம் செல்லும் வழியில் அமைந்துள்ள கிராமம் ஆகும். இக்கிராம எல்லைக்குள் புகழ்பெற்ற தேவாலயம் மற்றும் மசூதியும் உள்ளது. இங்கு கட்டுமர சவ்வாரி மற்றும் கடல் மைவிங் போன் பொழுது போக்கு அம்சங்கள் நிறைந்து இருப்பதால் அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

முட்டுக்காடு படகு துறை

முட்டுக்காடு படகு துறை

தமிழ்நாடு சுற்றுலாத்துறையால் இங்கு ஒரு படகு மையம் இயங்குகிறது. கடலில் நீல வானம் ஒளிர்வதை காணலாம். இங்கு ஆண்டு தோறும் பிப்ரவரி மாதத்தில் விண்டுசர்பிங் ரெகேட்டா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முட்டுக்காடு படகு குழுமத்தால் வேகப்படகு சவாரி, நீர் சறுக்கு விளையாட்டு போன்ற பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்துள்ளது. வங்காள விரிகுடாவிற்கு 36 கி.மீ தொலைவில் உள்ளது. மாமல்லபுரம் சாலையில் அடையாறுக்கு 23 கி.மீ தொலைவில் முட்டுக்காடு படகு துறை உள்ளது. காலை 9.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை இயங்குகிறது. தொலைபேசி 9952995827


 

மாமல்லபுரம் (மஹாபலிபுரம்)

மாமல்லபுரம்

மாமல்லபுரம் நிறைய ரிசார்ட்டுகள் அமைந்துள்ள ஒரு சுற்றுலா மையம் ஆகும். இங்கு அறிய நினைவு சின்னங்கள் மற்றும் கோயில்கள் நிறைந்துள்ளது. இது கடற்கரையில் பரந்து விரிந்து உருவாக்கப்பட்டுள்ளது. பல்லவ வம்சத்தால் உருவாக்கப்பட்டதோடு அவர்கள் ஆட்சிக் காலத்தில் இது பல்லவ வம்சத்தின் துறைமுகமாக திகழ்ந்தது. நரசிம்ம வர்மன் மாமல்லன் என்ற பெயரில் ஒரு பெரிய மல்யுத்த வீரராக இருந்ததால் மாமல்லபுரம் என பெயரிடப்பட்டது. இது மிகவும் கவர்ச்சிகரமான கடற்கறை ஆகும். இங்கு ரதங்கள், மண்டபங்கள், மற்றும் குகை கோயில்கள் அமைந்துள்ளது. 100 அடி நீளம் கொண்ட அர்ஜீனா பீனான்ஸ் உள்ளது. இங்குள்ள சிவன் கோயிலில் என்னற்ற சிற்பங்கள் நிறைந்துள்ளது.
திராவிட பாரம்பரியம் மிக்க கட்டிடக்கலை நயத்துடன் கூடிய இந்த கடற்கரை கோயில் வளாகத்தில் இரண்டு சிறிய கோயில்கள் உள்ளன. இது தென்னிந்தியாவின் மிகப்பெரிய கட்டமைப்பு ஆகும். இது யுனெஸ்கோ அமைப்பின் தளத்தில் பாரம்பரிய சின்னமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. இங்கு திறந்த நிலை அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு கட்டிடக் கலைக்கல்லூரி, சிற்ப வேலைப்பாடுகள், கைவினைப்பொருட்கள் நீண்ட அழகான கடற்கரையில் மில்லியன் கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். ஹோட்டல் தமிழ்நாடு, தமிழ்நாடு சுற்றுலாத் துறை அலகு-1, பீச் ரிசார்ட் காம்ளக்ஸ் எண். 2744 2361 – 64


முதலியார் குப்பம்

முதலியார் குப்பம்

தமிழ் நாடு சுற்றுலாத் துறையினரால் இந்த படகு இல்லம் பராமரிக்கப்பட்டு வருகிறது. சென்னை நகரிலிருந்து 90 கி.மீ தொலைவில் அமையப் பெற்றுள்ளது. மாமல்லபுரம் தெற்கில் 30 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இந்த படகு இல்லத்தில் பல வகையான படகு சவாரி- வாழைபழ படகு சவாரி, வட்டர் ஸ்கூட்டர், விறைவு படகு சவாரி போன்றவை நடத்தப்படுகிறது. இதற்கு அருகாமையில் உள்ள ஒதியூர் ஏரியில் படகு சவரி நடத்தப்பட்டு வருகிறது.ஓடியூர் ஏரியின் கடற்கரை தீவுக்கு மோட்டார் படகுப் பயணங்களை ஏற்பாடு செய்கிறது