மூடு

மீன்வளத்துறை

மீன்வளத்துறை

செங்கல்பட்டு மாவட்டத்தில் மீன்பிடித்தல் தொழில் மிக முக்கியமான தொழில்களில் ஒன்றாகும். 57 கிலோ மீட்டர் நீளமுள்ள கடற்கரையும் அதில் கானத்தூர் ரெட்டிக்குப்பம் கிராமம் முதல் கோட்டைக்காடு கிராமம் வரைக்கும் உள்ள 33 மீன்பிடி கிராமங்களும் பலதரப்பட்ட மீன் இனங்கள் பிடிப்படும் கடற்பகுதியாக உள்ளது. இதன் காரணமாக கடல்சார் மீன்பிடித்தல் இப்பகுதிகளில் முக்கிய வாழ்வதார தொழிலாக உள்ளது.

2. கடல்சார் மீன்வளம்

 இம்மாவட்டத்தில் சுமார் 6400க்கு மேற்பட்ட மீனவ குடும்பங்கள் கடல்சார் மீன்பிடித்தலை அடிப்படையான வாழ்வாதாராமாக கொண்டுள்ளது. 2014-2015 -ஆம் ஆண்டிற்கான கடல்சார் மீன் உற்பத்தியின் மதிப்பு 13,023.37 டன்கள் என கணக்கீடப்பட்டுள்ளது. இம்மாவட்டத்தில் வியாபார முக்கியத்துவம் வாய்ந்த மத்தி, நெத்திலி, வாலை, வஞ்சிரம், கொடுவாள், சுறா, பாரை, வாவல், சிறிய இறா, நண்டு மற்றும் கணவாய் போன்ற மீன் இனங்கள் பிடிக்கப்படுகின்றன.

3. நன்னீர் மீன்பிடிப்பு

செங்கல்பட்டு நகரத்தினை ஒட்டியுள்ள கொளவாய் ஏரி இம்மாவட்டத்தின் மிக முக்கியமாக நன்னீர் மீன்பிடிப்பு நடைபெறும் நீர்நிலையாக உள்ளது. இம்மாவட்டத்தில் உரிமம் மற்றும் பங்கு அடிப்படையிலான நன்னீர் மீன்பிடித்தல் தொழில் நடைபெற்று வருகின்றது. மேற்குறிப்பிடப்பட்டுள்ள கொளவாய் ஏரியில் நன்னீர் மீன்பிடிப்பு கூட்டுறவு சங்கத்தின் மூலம் மீன்பிடித்தல் நடைபெற்று வருகின்றது. நன்னீர் நீர்நிலைகளை சிறப்புற பயன்படுத்தும் ரீதியில் கேஜ் கல்சர் (cage culture) மீன்பிடித்தல் முறை கொளவாய் ஏரியில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

பொதுவாக டிலப்பியா (Tilapia) மற்றும் பென்கேஷியஸ் (Pangasius) இன மீன்கள் மேற்குறிப்பிட்டுள்ள கேஜ் கல்சர் (cage culture) மீன்பிடித்தல் முறையில் வளர்க்கப்படுகின்றன. கொளவாய் ஏரியில் 82 கூண்டுகள் ( 58 கூண்டுகள் – 6 மீட்டர் X 4 மீட்டர் மற்றும் 24 கூண்டுகள் – 4 மீட்டர் X 4 மீட்டர்) நிறுவப்பட்டுள்ளன. மேற்குறிப்பிடப்பட்டுள்ள கூண்டுகள் அமைத்து மீன்வளர்தல் முறை மட்டும் அல்லாமல் விதை வளர்ப்புக்கான கூண்டுகளும் நிறுவப்பட்டுள்ளன. இவை தவிர, செங்கல்பட்டு மாவட்டத்தில் ஆத்தூர் கிராமத்தில் மீன்விதை வளர்ப்பு மையம் ஒன்று செயல்பட்டு வருகிறது.

 4. செங்கல்பட்டு மாவட்டத்தில் மீன்வளத்துறை மூலமாக செயல்படுத்தப்பட்டு வரும் முக்கியமான திட்டங்கள்.

4.1. கடல்சார் மீனவர்களுக்கான தேசிய சேமிப்பு மற்றும் நிவாரணம் திட்டம்

இத்;திட்டத்தின்கீழ் மீன்பிடி சரிவு காலத்தில் பயனாளிகளுக்கு வழங்கப்படும் நிவாரண தொகை மத்திய- மாநில அரசுகளினால் சரிபாதியாக பங்களிப்பு செய்யப்படுகிறது. மத்திய அரசினால் அனுமதி அளிக்கப்பட்டுள்ள புதிய நிவாரண திட்டத்தின்படி சம்பந்தப்பட்ட பயனாளி(மீனவர்) வருடத்திற்கு ரூ.1500 (மாதத்திற்கு ரூ.175 வீதம் முதல் எட்டு மாதங்களுக்கும் செப்டம்பர் மாதத்திற்கு ரூ.100-ம்) பங்களிப்பு அளிக்க வேண்டும். மேற்படி பங்களிப்பு தொகையுடன் மத்திய மாநில அரசுகளின் பங்களிப்பான ரூ.3000-ம் (தலா ரூ.1500) சேர்க்கப்படுகிறது. இதன்படி ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு மீனவர்களுக்கும் ரூ.4500 மீன்பிடி சரிவு காலத்தில் நிவாரணமாக வழங்கப்படுகிறது. மேற்படி நிவாரணத்தொகையானது பயனாளிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக நேஷ்னல் எலக்ட்ரானிக் ஃபண்டு டிரான்ஸ்வர் (NEFT) மூலம் மாற்றம் செய்யப்படுகிறது.

4.2. கடல்சார் மீனவ பெண்களுக்கான தமிழ்நாடு மாநில சேமிப்பு மற்றும் நிவாரணம் திட்டம்

 இத்திட்டமானது மாநில அரசின் திட்டமாக மேலே குறிப்பிடப்பட்டுள்ள கடல்சார் மீன்வனர்களுக்கான திட்டத்திற்கான வழிமுறைகளின் அடிப்படையிலே செயல்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் ஏற்கனவே வழங்கப்பட்டு வந்த நிவாரணத்தொகை ரூ.2500 மாநில அரசினால் ரூ.4500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதன்படி சம்பந்தப்பட்ட பயனாளி மீனவ பெண் வருடத்திற்கு ரூ.1500 (மாதத்திற்கு ரூ.175 வீதம் முதல் எட்டு மாதங்களுக்கும் செப்டம்பர் மாதத்திற்கு ரூ.100-ம்) பங்களிப்பு அளிக்க வேண்டும். மேற்படி பங்களிப்பு தொகையுடன் மத்திய மாநில அரசுகளின் பங்களிப்பான ரூ.3000-ம் (தலா ரூ.1500) சேர்க்கப்படுகிறது. இதன்படி ஒவ்வொரு ஆண்டும் சம்மந்தப்பட்ட மீனவ பயனாளி பெண்களுக்கு ரூ.4500 மீன்பிடி சரிவு காலத்தில் நிவாரணமாக வழங்கப்படுகிறது. மேற்படி நிவாரணத்தொகையானது பயனாளிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக நேஷ்னல் எலக்ட்ரானிக் ஃபண்டு டிரான்ஸ்வர் (NEFT) மூலம் மாற்றம் செய்யப்படுகிறது.

4.3. மீன்பிடி தடை காலத்தில் கடல்சார் மீனவ குடும்பங்களுக்கு ரூ.5000 வழங்கும் திட்டம்.

 கடல்சார் வளங்களை பாதுகாக்கும் நோக்கத்துடன் அரசால் முன்பு இருந்த 45 நாட்கள் மீன்படி தடைக்காலம் கடந்த 2017-ம் ஆண்டு முதல் 61 நாட்களாக(கிழக்கு கடற்கரைப்பகுதியில் ஏப்ரல் 15 முதல் மே 29 வரை) உயர்த்தப்பட்டுள்ளது. மீன்பிடி படகுகளில் வேலையாட்களாக பணிபுரியும் மீனவர்கள் மேற்படி தடைக்காலத்தில் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகுகின்றார்கள். மேற்குறிப்பிடப்பட்டுள்ள மீனவர்களின் துயரத்தினை போக்கும்வண்ணம் தமிழ்நாடு அரசு மீன்பிடி தடைக்காலத்தில் வழங்கப்படும் உதவித்தொகையான ரூ.2000-ஐ கடந்த 2017-ஆம் ஆண்டு முதல் ரூ.5000-ஆக உயர்த்தியுள்ளது.மேற்குறிப்பிடப்பட்டுள்ள உதவித்தொகையானது பயனாளிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக நேஷ்னல் எலக்ட்ரானிக் ஃபண்டு டிரான்ஸ்வர் (NEFT) மூலம் மாற்றம் செய்யப்படுகிறது.

4.4. மீன்பிடி சரிவு காலத்தில் மீனவ குடும்பங்களுக்கு வழங்கப்படும் சிறப்பு நிதியுதவி ரூ.5000

மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களால் கடந்த ஆகஸ்ட் 2011-ல் சட்டசபையில் மேற்கொள்ளப்பட்ட அறிவிப்பைத் தொடர்ந்து கடற்கரை மாவட்டங்களில் வாழும் கடல்சார் மீன்வ குடும்பங்களுக்கு மீன்பிடி சரிவு காலத்தில் மேற்படி குடும்பங்களின் துயர் போக்கும் வண்ணம் சிறப்பு நிதியுதவியாக ரூ.4000 அரசால் அறிவிக்கப்பட்டது. பின்பு மேற்படி தொகை ரூ.5000- ஆக உயர்த்தப்பட்டது. மேற்குறிப்பிடப்பட்டுள்ள நிதியுதவதி தொகையானது பயனாளிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக நேஷ்னல் எலக்ட்ரானிக் ஃபண்டு டிரான்ஸ்வர் (NEFT) மூலம் மாற்றம் செய்யப்படுகிறது.

4.5. மீன்னவர்களுக்கான விபத்துக்கு எதிரான குழு காப்பீட்டு திட்டம்.

இத்திட்டம் மத்திய மாநில அரசுகளின் சமபங்களிப்புடன் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின்கீழ் காப்பீட்டு தவணை மீனவர்களிடமிருந்து வசூலிக்கப்படுவதில்லை. மரணம், காணாமல் போகுதல் மற்றும் நிரந்தர ஊனம் போன்றவை ஏற்படும் போது ரூ.2 இலட்சம் நிவாரணமாக சம்பந்தப்பட்ட பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வழங்கப்படும். பகுதி ஊனம் ஏற்படும் நேர்வில் மருத்துவமனை செலவிற்காக சம்பந்தப்பட்ட பாதிக்கப்பட்ட நபருக்கு ரூ.1 இலட்சம் வழங்கப்படும்.

4.6. நன்னீர்சார் மீனவர்களுக்கு மீன்பிடி உபகாரணங்கள் மானிய விலையில் வழங்குதல்

 நன்னீர்சார் மீன்பிடி உற்பத்தி மற்றும் உற்பத்தி திறன் மேம்படுத்தும் நோக்கத்துடன் ரூ.20,000 மதிப்பிலான மீன்வலை 40 சதவீதம் மானியத்துடன் நன்னீசார் மீனவர்களுக்கு வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின்கீழ் நன்னீர் மீனவ கூட்டுறவு சங்கத்தின் உறுப்பினர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது.