மூடு

மாமல்லபுரம்

வழிகாட்டுதல்
வகை வரலாற்று சிறப்புமிக்கது

மாமல்லபுரம் பழங்கால துறைமுக நகரம்

செங்கல்பட்டு மாவட்டத்தில் அமைந்துள்ள மாமல்லபுரம் (மஹாபலிபுரம்) ஒரு முக்கிய சுற்றுலா தளம் ஆகும். பல்லவ மன்னர்கள் காலத்தில் இங்கு முக்கிய துறைமுகமாக மாமல்லபுரம் கடற்கைரை செயல்பட்டு வந்துள்ளது. இச்செழிப்பன துறைமுக நகரம் அழகிய சிற்பங்களுடன் பல்லவ மன்னர்களால் வாழ்நாள் குத்தகைக்கு வழங்கப்பட்டிருந்தது. மாமல்லபுர சிற்பங்கள் அனைத்தும் திராவிட பாரம்பரியத்துடன் அமைக்கப்பட்டு பல்லவ மன்னர்களின் கலை சிறப்புக்கு எடுத்துக்காட்டாக திகழ்ந்தது.

மாமல்லபுர சிர்பங்கள் ஒரே கல்லில் செதுக்கப்பட்ட தேர்சிலைகள், குகை கோயில்கள் நல்ல உறுதித்தன்மையுடன் அமைக்கப்பட்டுள்ளன. உயிரோட்டத்துடன் கூடிய நினைவு சின்னங்கள், புனித தன்மை மிக்க அழகிய சிற்பங்களும் அமைக்கப்பட்டுள்ளது. புராண கதைகள், காவிய போர்கள், பேய்கள், கடவுள்கள், விலங்கினங்கள் போன்ற அனைத்து உருவங்களும் தெளிவாக சுவர்களில் வரையப்பட்டுள்ளது. அனைத்து சிற்பங்களும் தத்ரூபமாக கலைநயத்துடன் வரையப்பட்டுள்ளது. மாமல்லபுரத்தில் அமைந்துள்ள பெரும்பாலான கோயில்கள் பல்லவ மன்னர்களில் நரசிம்ம வர்ம பல்லவர் 1 மற்றும் நரசிம்ம வர்ம பல்லவர் 2 ஆகிய மன்னர்கள் காலத்தில் முழுமை பெற்றது.

சோழர்காலத்தின் சிற்பங்கள் பல்லவர்கால சிற்பங்களை விட மிகவும் எளிமையானவையாக அமையப்பட்டுள்ளது. பல்லவ மன்னர்கள் ஜைன மதத்தினை பின்பற்றி வந்தனர் ஆனால் மகேந்திர வர்ம பல்லவ மன்னர் காலத்தில் வைனவத்தை பின்பற்றப்பட்டதால் சிவன் மற்றும் விஷ்ணு ஆலங்கள் கட்டப்பட்டது. இக் கோயில் சிற்பங்கள் தாஜ்மஹாலிற்கு அடுத்தபடியாக காதல் தீம் கொண்ட சிறபங்கள் கொண்டதாக உள்ளது. பெரும்பாலான கோயில்கள் கடல் வெள்ளத்தினால் கடலுக்குள் மூழ்கியும் பின்னர் கடல் நீர் வற்றி கோயில்கள் காலை சூரிய ஒளியில் மிக அழகாக காட்சி அளிக்கின்றது. இந்த பிரமாண்ட சுற்றுலா பயனிகளை இக்கடற்கரை மிகவும் கவர்கிறது.

குகை கோயில்கள்

மாமல்லபுரத்தில் ஒன்பது குகை கோயில்கள் அமைந்துள்ளன. இந்த குகை கோயில்கள் இந்து மத புராணத்தில் நிகழ்ந்த உண்மை சம்பவங்கள் பற்றிய சிறப்பம்சங்கள் நிறைந்துள்ளது. பல்வேறு குகை கோயில்களில் ஓய்வெடுப்பதற்கான வசதிகளும் அமையப்பட்டுள்ளது. குறிப்பாக கிருஷ்ணர் குகையில் அமைந்துள்ள சிற்பங்கள் அனைத்தும் உயிரோட்டத்துடன் அமையப்பெற்றுள்ளன. பிரபஞ்சத்தில் விஷ்ணு உறங்கும் கோலத்தில் உள்ளதைப்போல் மகிஷாசுரமர்த்தினி குகையில் அமைந்துள்ளது. இங்கு அமைந்துள்ள துர்க்கா தேவி சிலை எருமை மாட்டின் தலையுடன் ஆக்ரோஷமாக காட்சியளிக்கிறது.

புகைப்பட தொகுப்பு

  • மாமல்லபுரம்
  • புலிக்குகை
  • பஞ்ச ரதம்

அடைவது எப்படி:

வான் வழியாக

சென்னை விமான நிலையம் (52 கி.மீ.,) மஹாபலிபுரம் நகருக்கு அருகிலுள்ள விமான நிலையம் ஆகும். டெல்லி, மும்பை, பெங்களூர், புனே மற்றும் கொல்கத்தா போன்ற இந்தியாவின் அனைத்து முக்கிய நகரங்களுடன் சென்னை விமான நிலையம் இணைக்கப்பட்டுள்ளது. மஹாபலிபுரத்தை அடைவதற்கு விமான நிலையத்திலிருந்து டாக்ஸி / வாடகை வண்டிகள் மற்றும் பேருந்துகள் கிடைக்கின்றன.

தொடர்வண்டி வழியாக

செங்கல்பட்டு (22 கி.மீ) அருகில் உள்ள இரயில் நிலையம் ஆகும். இருப்பினும், சென்னை ரயில் நிலையம் (60 கி.மீ) அருகில் உள்ள பெரிய ரயில் நிலையமாகும்.மஹாபலிபுரத்தை அடைவதற்கு டாக்ஸி / வாடகை வண்டிகள் மற்றும் பேருந்துகள் இந்த நிலையங்களிலிருந்து கிடைக்கின்றன.

சாலை வழியாக

தமிழ்நாடு பொது போக்குவரத்து சேவைகள் மற்றும் தனியார் சுற்றுலா பேருந்துகள் (சென்னை சென்டரில் இருந்து இயக்கப்படுகின்றன) இரண்டிலும் இப்பகுதியில் உள்ள நகரங்களிலிருந்து மஹாபலிபுரம் வரை பல பேருந்துகள் உள்ளன. இந்த நகரம் சென்னை கிழக்கு கடற்கரை சாலை (ஈ.சி.ஆர்) மற்றும் பழைய மஹாபலிபுரம் சாலை(ஓஎம்ஆர்) வழியாக நன்கு இணைக்கப்பட்டுள்ளது.