ஊரக மகளிருக்கு விலையில்லா கறவை மாடுகள் வழங்கும் திட்டம்
தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்பு துறை மூலம் ஊரக பகுதியில் வாழும் பெண்களின் வாழ்வாதாரத்தினை உறுதி செய்யவும், பால் உற்பத்தியை மேலும் அதிகரிக்கவும் நடப்பாண்டில் தகுதி வாய்ந்த பெண்களுக்கு கறவை மாடுகள் 100% மானியத்தில் வழங்கப்படும்.
இத்திட்டத்தில் ரூ.50,000/- மதிப்புள்ள கறவை மாடும், அதற்குரிய காப்பீடும் (2 வருடங்களுக்கான), வழங்கப்பட்ட கறவை பசுவை தங்கள் வீடுகளுக்கு கொண்டு செல்ல போக்குவரத்து, உடனடி தீவன செலவினத்திற்காக ரூ.3,000/- வழங்கப்படும்.
இத்திட்டத்தில் 18 முதல் 60 வயதிற்கு உட்பட்ட மகளிர் மற்றும் திருநர்கள், கறவை பசு வளர்ப்பதில் ஆர்வம் உள்ளவர்கள், கறவை பசு வளர்ப்பதற்கு போதுமான அளவு இடவசதி, தீவன வசதி உள்ளோர் பயன்பெறலாம். 2.5 ஏக்கருக்கு மேல் நிலம் வைத்திருப்பவர்கள், குடும்ப ஆண்டு வருமானம் 2.5 இலட்சத்திற்கு மேல் உள்ளவர்கள், ஏற்கனவே கால்நடை பராமரிப்புத் துறையின் சார்பாக கால்நடைகள் வழங்கிய திட்டத்தில் பயன் பெற்றவர்கள் மற்றும் ஏற்கனவே கறவை மாடு வைத்துள்ளோர் இத்திட்டத்தில் விண்ணப்பிக்க இயலாது.
இத்திட்டத்தில் ஆதரவற்ற விதவைகள், கணவரால் கைவிடப்பட்ட மகளிர், திருநர்கள், மாற்றுத்திறனாளி மகளிர், மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகள் அல்லது மாற்றுத்திறனுடைய குடும்ப உறுப்பினர்களை கொண்ட மகளிர் ஆகியோருக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
இத்திட்டம் செங்கல்பட்டு மாவட்டத்தில் வளமிகு வட்டார வளர்ச்சி திட்டம் (Focus Block Development programme) செயல்படும் லத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் நடப்பாண்டில் முதற்கட்டமாக செயல்படுத்தப்பட உள்ளது.
இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் இணையதளத்தின் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க இயலும். இணையதளம் மூலம் விண்ணப்பிக்க தெரியாதவர்கள் கீழ்க்கண்ட நிலையத்தில் உள்ள விண்ணப்ப உதவி மையத்தினை அணுகி விண்ணப்பிக்கலாம்.
1.மதுராந்தகம் கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குநர் அலுவலக உதவி மையம்.
2.மதுராந்தகம், கால்நடை மருந்தகம் உதவி மையம்
இது குறித்து மேலும் விவரங்களை அறிய அருகிலுள்ள கால்நடை நிலையங்களை அணுகவும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
Domain name: tnahschemes.tn.gov.in
இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் மேற்கண்ட இணையதளத்தின் மூலம் 27.11.2026 முதல் 17.12.2026 முடிய விண்ணப்பிக்கலாம்.
வெற்றி மகளிர் ஆடுகள் வளர்ப்புத் திட்டம்
தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்பு துறை மூலம் ஊரக பகுதியில் வாழும் பெண்களின் வாழ்வாதாரம் மற்றும் பொருளாதார வளர்ச்சியினை மேம்படுத்திட நடப்பாண்டில் தகுதி வாய்ந்த ஊரக மகளிருக்கு வெற்றி மகளிர் ஆடுகள் வளர்ப்புத் திட்டத்தின் கீழ் 100% மானியத்தில் செம்மறி ஆடு/வெள்ளாடுகள் வழங்கப்படும்.
இத்திட்டத்தில் ரூ.30,000/- மதிப்புள்ள 5 செம்மறி ஆடு/வெள்ளாடுகளும் (அதில் 1 ஆண் கிடா, 4 பெண் ஆடுகள் அல்லது 5பெண் ஆடுகளும்,) அதற்குரிய காப்பீடும் (2 ஆண்டுகளுக்கான) வழங்கப்பட்ட ஆடுகளை தங்கள் வீடுகளுக்கு கொண்டு செல்ல போக்குவரத்து, மற்றும் உடனடி தீவன செலவினத்திற்காக ரூ.2,500/- வழங்கப்படும். ஆடுகள் நல்ல முறையில் பராமரித்து வருவோர்க்கு ஓராண்டுக்கு பிறகு ரூ.2,000/- ஊக்கத் தொகையாக வழங்கப்படும்,
இத்திட்டத்தில் 18 முதல் 60 வயதிற்கு உட்பட்ட ஆதரவற்ற விதவைகள், கணவரால் கைவிடப்பட்ட மகளிர், திருநர்கள், மாற்றுத்திறனாளி மகளிர், மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகள் அல்லது மாற்றுத்திறனுடைய குடும்ப உறுப்பினர்களை கொண்ட மகளிர் மட்டுமே விண்ணப்பிக்க இயலும். பயனாளிகள் / குடும்ப உறுப்பினர்கள் பெயரில் நிலம் உள்ளவர்கள், குடும்ப ஆண்டு வருமானம் 2.5 இலட்சத்திற்கு மேல் உள்ளவர்கள், ஏற்கனவே கால்நடை பராமரிப்புத் துறையின் சார்பாக கால்நடைகள் வழங்கிய திட்டத்தில் பயன்பெற்றவர்கள், கால்நடை வைத்திருப்போர் மற்றும் 100-க்கும் மேல் கோழியினம் வைத்திருப்பவர்கள் இத்திட்டத்தில் விண்ணப்பிக்க இயலாது.
இத்திட்டம் செங்கல்பட்டு மாவட்டத்தில் வளமிகு வட்டார வளர்ச்சி திட்டம் (Focus Block Development programme) மற்றும் மாநில சமச்சீர் வளர்ச்சி நிதி (State Balanced Growth Fund) திட்டம் செயல்படும் லத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் நடப்பாண்டில் முதற்கட்டமாக செயல்படுத்தப்பட உள்ளது.
இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் இணையதளத்தின் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க இயலும். இணையதளம் மூலம் விண்ணப்பிக்க தெரியாதவர்கள் கீழ்க்கண்ட அலுவலகத்தில் உள்ள விண்ணப்ப உதவி மையத்தினை அணுகி விண்ணப்பிக்கலாம்.
1. மதுராந்தகம் கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குநர் அலுவலக உதவி மையம்.
2. மதுராந்தகம், கால்நடை மருந்தகம் உதவி மையம்.
இது குறித்து மேலும் விவரங்களை அறிய அருகிலுள்ள கால்நடை நிலையங்களை அணுகவும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
Domain name: tnahschemes.tn.gov.in
இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் மேற்கண்ட இணையதளத்தின் மூலம் 27.11.2026 முதல் 17.12.2026 முடிய விண்ணப்பிக்கலாம்.