மூடு

அம்மா பூங்கா

தேதி : 10/01/2020 - 31/01/2023 | துறை: கிராமப்புற வளர்ச்சி

ஊரகப் பகுதிகளிலுள்ள மக்களின் நலனுக்காக விளையாட்டு மைதானங்கள், பூங்காக்கள், விளையாட்டு மன்றங்கள் மற்றும் கலாச்சார மையங்கள் ஆகியவற்றை அமைத்தல் கிராம ஊராட்சியின் விருப்பக் கடமைகளில் ஒன்றாகும்.

அதனடிப்படையில், 2016-17 ஆம் நிதியாண்டில் நகர பகுதிகளுக்கு இணையாக ஊரக பகுதிகளில் கேளிக்கை உட்கட்டமைப்பு வசதிகளுடன் ரூ.100 கோடி மதிப்பீட்டில் பூங்கா ஒன்றுக்கு ரூ.20 இலட்சம் வீதம் 500 அம்மா பூங்காக்கள் அமைக்கும் பணிகள் எடுக்கப்பட்டுள்ளன.

அம்மா பூங்காக்கள் தெரிவு செய்தல் மற்றும் அதன் திட்ட கூறுகள்

அம்மா பூங்காக்கள், ஆண்டு வருமானம் ரூ.20 இலட்சத்திற்கு மேலாகவும் மற்றும் 14வது நிதிக்குழு மானியத்தின் மூலம் ரூ.20 இலட்சத்திற்கு மேலாக வருமானம் பெறக்கூடியதாகவும் உள்ள கிராம ஊராட்சிகளில் அமைக்கப்படும். அம்மா பூங்கா கிராம ஊராட்சிகளில் குடியிருப்புகளுக்கு நடுவில் சுமார் 15,000 முதல் 20,000 சதுர அடி வரை கிராம ஊராட்சிக்கு சொந்தமான நிலம் அல்லது ஒப்படைக்கப்பட்ட திறந்த வெளி பாதுகாக்கப்பட்ட இடத்தில் அமைக்கப்படும்.

அம்மா பூங்கா அமைக்கப்படும் புற நகரம் / நகரத்தை ஒட்டியுள்ள கிராம ஊராட்சிகளில் பெண்கள், இளைஞர்கள் மற்றும் குழந்தைகளை மகிழ்விக்கும் வகையில் விளையாட்டு சாதனங்களுடன் கூடிய அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்படும்.

அம்மா பூங்கா கீழ் கண்ட வசதிகளுடன் அமைக்கப்படும்

  • சிமெண்ட் கான்கிரீட் அல்லது பேவர் பிளாக் நடைபாதை
  • LED விளக்குகளுடன் கூடிய ஒளி அமைப்புகள்.
  • சிமெண்ட்/கிரானைட் பெஞ்சுகள் அல்லது எஃகினால் ஆன பெஞ்சுகள்
  • பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியோர்களுக்கான கழிப்பறை
  • குடிநீர் வசதிகள் மற்றும் தோட்ட பராமரிப்பு, கழிப்பறைகளுக்கு தேவையான தண்ணீர் வசதி
  • விளையாட்டு பொருட்களுடன் கூடிய குழந்தைகள் விளையாடும் பகுதி
  • கொடிகளுடன் கூடிய நல்வரவு வலைவு மற்றும் வெளியே செல்லும் வழி
  • பாதுகாப்பு கம்பிகளுடன் கூடிய சுற்றுசுவர் வசதிகள்
  • தலைப்புகளுடன் கூடிய தகவல் மற்றும் அறிவிப்பு பலகைகள் உரிய இடங்களில் வைக்கப்படும்
  • கூழாங்கல் நடைபாதை மற்றும் எட்டு வடிவிலான கூழாங்கல் நடைபாதை தேவையான இடங்களில் அமைக்கப்படும்

பயனாளி:

கிராமப்புற மக்கள்.

பயன்கள்:

கிராமப்புற மக்களின் பொழுதுபோக்கு

விண்ணப்பிப்பது எப்படி?

கையேடு