சமூகநலத்துறை
திருமண நிதி உதவி திட்டங்கள்
- மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதி உதவித் திட்டம்.
- டாக்டர் தர்மாம்பாள் அம்மையார் நினைவு விதவை மறுமண நிதி உதவித் திட்டம்.
- ஈ.வெ.ரா. மணியம்மையார் நினைவு ஏழை விதவையர் மகள் திருமண நிதி உதவித் திட்டம்.
- அன்னை தெரசா நினைவு ஆதரவற்றப் பெண்களுக்கான திருமண நிதி உதவித் திட்டம்.
- டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி நினைவு கலப்புத் திருமண நிதி உதவித் திட்டம்.
அனைத்து திருமண நிதியுதவித் திட்டங்கள் கீழ் பட்டதாரி அல்லாதவர்களுக்கு திருமாங்கல்யம் செய்வதற்காக 4 கிராம் (22 காரட்) தங்க நாணயத்துடன் நிதியுதவியாக ரூ.25000 –மும், பட்டம் மற்றும் பட்டயப்படிப்பு படித்தவரகளுக்கு திருமாங்கல்யம் செய்வதற்காக 4 கிராம் (22 காரட்) தங்க நாணயத்துடன் நிதியுதவியாக ரூ.50000 – மும் 17.05.2011 முதல் வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் 4 கிராம் தங்கமானது 23.05.2016 முதல் 8 கிராம்(22 காரட்) தங்கமாக உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது.
மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதி உதவித் திட்டம்.
திட்டத்தின் நோக்கம்:
ஏழை பெண்களின் திருமணத்திற்கு அவர்களின் பெற்றோர்களுக்கு நிதியுதவி வழங்குதலும் பெண்களின் கல்வி நிலையை உயர்த்துதலும்.
வழங்கப்படும் உதவி:
திட்டம் 1:
ரூ25000 –- நிதி உதவி மற்றும் 23.05.2016 முதல் திருமாங்கல்யம் செய்வதற்காக 1 சவரன் (8 கிராம்) 22 காரட் நாணயம்.
திட்டம் 2:
ரூ50000 –- நிதி உதவி மற்றும் 23.05.2016 முதல் திருமாங்கல்யம் செய்வதற்காக 1 சவரன் (8 கிராம்) 22 காரட் நாணயம்.
திட்டத்தில் பயன்பெறுவதற்கான தகுதிகள்:
திட்டம் 1
- மணப்பெண் 10-ஆம் வகுப்பு பள்ளியில் படித்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- தனியார் தொலைதூரக் கல்வி மூலம் படித்து இருந்தால் 10-ஆம் வகுப்பு தேர்ச்சி அடைந்திருத்தல் வேண்டும்.
- பழங்குடியினராக இருந்தால் 5-வது படித்திருத்தல் வேண்டும்.
திட்டம் 2
- பட்டதாரிகள் கல்லூரியிலோ அல்லது தொலை துரக்கல்வி மூலமோ அல்லது அரசால் அங்கீகாரிக்கப்பட்ட திறந்தவெளி பல்கலைக் கழகங்களிலோ படித்து தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்.
- பட்டயப் படிப்பு (Diploma Holder) தேர்ச்சி பெற்றவராக இருத்தல் வேண்டும். பட்டயப் படிப்பு எனில் தமிழக அரசின் தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் படித்து தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்.
பொது
- குடும்ப ஆண்டு வருமானம் 72000 –க்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.
- ஒரு குடும்பத்தில் ஒரு பெண்ணுக்கு மட்டும் உதவித் தொகை வழங்கப்படும்.
- திருமணத் தேதியன்று மணமகளுக்கு 18 வயது நிரம்பியிருக்க வேண்டும் உச்ச வயது வரம்பு இல்லை.
சமர்ப்பிக்க வேண்டிய சான்றுகள்:
- பள்ளி மாற்றுச் சான்று நகல்.
- மதிப்பெண் பட்டியல் நகல் பத்தாம் வகுப்பு – திட்டம் 1
- பட்டப்படிப்பு, பட்டயப்படிப்பு தேர்ச்சி சான்று நகல் – திட்டம் 2
- வருமானச் சான்று.
- திருமண அழைப்பிதழ் (திருமணத்திற்கு 40 நாட்களுக்கு முன் விண்ணப்பிக்க வேண்டும்).
விண்ணப்பிக்க வேண்டிய கால அளவு:
திருமணத்திற்கு 40 நாட்களுக்கு முன் விண்ணப்பிக்கலாம். சிறப்பு நேர்வுகளில் தக்க காரணங்கள் இருந்தால் திருமணத்திற்கு முதல் நாள் வரை விண்ணப்பிக்கலாம்.
டாக்டர் தர்மாம்பாள் அம்மையார் நினைவு விதவை மறுமண நிதி உதவித் திட்டம்
திட்டத்தின் நோக்கம்:
விதவைகளுக்கு புதுவாழ்வு அளித்தல்.
வழங்கப்படும் உதவி:
திட்டம் 1:
ரூ25000 –– நிதி உதவி மற்றும் 23.05.2016 முதல் திருமாங்கல்யம் செய்வதற்காக 1 சவரன்( 8 கிராம்) 22 காரட் நாணயம்.
திட்டம் 2:
ரூ50000 –– நிதி உதவி மற்றும் 23.05.2016 முதல் திருமாங்கல்யம் செய்வதற்காக 1 சவரன்( 8 கிராம்) 22 காரட் நாணயம்.
திட்டத்தில் பயன்பெறுவதற்கான தகுதிகள்:
திட்டம் 1:
கல்வித் தகுதி தேவை இல்லை.
திட்டம் 2:
- பட்டதாரிகள் கல்லூரியிலோ அல்லது தொலைதூரக்கல்வி மூலமோ அல்லது அரசால் அங்கீகாரிக்கப்பட்ட திறந்தவெளிப் பல்கலைக் கழகங்களிலோ படித்து தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்.
- பட்டயப் படிப்பு (Diploma Holder) எனில் தமிழக அரசின் தொழில்நுட்பக் கல்வி இயக்குநகரத்தால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் படித்து தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்.
பொது
- வருமான வரம்பு ஏதும் இல்லை.
- மணமகளின் குறைந்தபட்ச வயது 20ஆக இருத்தல் வேண்டும் மணமகனின் வயது 40 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
- திருமணத் தேதியன்று மணமகளுக்கு 18 வயது நிரம்பியிருக்க வேண்டும் உச்ச வயது வரம்பு இல்லை.
சமர்ப்பிக்க வேண்டிய சான்றுகள்:
- விதவைச் சான்று.
- மறுமணம் செய்வதற்கான திருமண அழைப்பிதழ்.
- மணமகன் மற்றும் மணமகளின் வயதுச் சான்று.
- பட்டப்படிப்பு பட்டயப்படிப்பு தேர்ச்சி சான்று திட்டம் – 2
- திருமண புகைப்படம்.
விண்ணப்பிக்க வேண்டிய கால அளவு:
திருமண நாளிலிருந்து 6 மாத காலத்திற்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
ஈ.வெ.ரா. மணியம்மையார் நினைவு ஏழை விதவையர் மகள் திருமண நிதி உதவித் திட்டம்
திட்டத்தின் நோக்கம்:
ஏழை விதவையரின் மகளின் திருமணத்தை நடத்துவதில் போதிய நிதிவசதி இல்லாததால் ஏற்படும் சிரமத்தைத் தவிர்க்கும் வகையில் திருமணத்திற்கு நிதி உதவி வழங்குதல்.
வழங்கப்படும் உதவி:
திட்டம் 1:
ரூ25000 – நிதி உதவி மற்றும் 23.05.2016 முதல் திருமாங்கல்யம் செய்வதற்காக 1 சவரன்( 8 கிராம்) 22 காரட் நாணயம்.
திட்டம் 2:
ரூ50000 – நிதி உதவி மற்றும் 23.05.2016 முதல் திருமாங்கல்யம் செய்வதற்காக 1 சவரன்( 8 கிராம்) 22 காரட் நாணயம்.
திட்டத்தில் பயன்பெறுவதற்கான தகுதிகள்:
திட்டம் 1:
கல்வித் தகுதி தேவை இல்லை.
திட்டம் 2:
- பட்டதாரிகள் கல்லூரியிலோ அல்லது தொலைதூரக்கல்வி மூலமோ அல்லது அரசால் அங்கீகாரிக்கப்பட்ட திறந்தவெளி பல்கலைக் கழகங்களிலோ படித்து தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்.
- பட்டயப் படிப்பு (Diploma Holder) எனில் தமிழக அரசின் தொழில்நுட்பக் கல்வி இயக்குநகரத்தால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் படித்து தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்.
பொது
- குடும்ப ஆண்டு வருமானம் 72000 –க்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.
- விதவைத் தாயின் ஒரு பெண்ணுக்கு மட்டும் உதவித் தொகை வழங்கப்படும்.
- திருமணத் தேதியன்று மணமகளுக்கு 18 வயது நிரம்பியிருக்க வேண்டும் உச்ச வயது வரம்பு இல்லை.
சமர்ப்பிக்க வேண்டிய சான்றுகள்:
- சமுகப் பாதுகாப்பு திட்டத்தின்கீழ் விதவை உதவித்தொகை பெறுபவர்களுக்கு விதவைச் சான்று வருமானச் சான்று தேவையில்லை.
- விதவை உதவித் தொகை பெறாதவர்களுக்கு மேற்படி விதவைச் சான்று மற்றும் வருமானச் சான்று வட்டாட்சியரிடமிருந்து பெற்று சமர்ப்பிக்க வேண்டும்.
- விதவையர் மகளின் வயது சான்றிதழ்.
திட்டம் 2:
பட்டப்படிப்பு படித்தவர்கள் கல்லூரிகள் தொலைதுரக்கல்வி அரசால் அங்கீகாரிக்கப்பட்ட திறந்தவெளி பல்கலைக்கழகங்களில் படித்து தேர்ச்சி பெற்ற சான்றிதழ்களின் நகல் மற்றும் பட்டயப் படிப்பு படித்தவர்கள் (Diploma Holder) எனில் தமிழக அரசின் தொழில்நுட்ப கல்வி இயக்குநகரத்தால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் படித்து தேர்ச்சி பெற்ற சான்றிதழ்களின் நகல்.
விண்ணப்பிக்க வேண்டிய கால அளவு:
திருமணத்திற்கு 40 நாட்களுக்கு முன் விண்ணப்பிக்கலாம். சிறப்பு நேர்வுகளில் தக்க காரணங்கள் இருந்தால் திருமணத்திற்கு முதல் நாள் வரை விண்ணப்பிக்கலாம்.
அன்னை தெரசா நினைவு ஆதரவற்ற பெண்களுக்கான திருமண நிதி உதவித் திட்டம்
திட்டத்தின் நோக்கம்
ஆதரவற்ற பெண்களுக்கு பொருளாதார வகையில் திருமணத்திற்கு நிதி உதவுதல்.
வழங்கப்படும் உதவி:
திட்டம் 1:
ரூ25000 – நிதி உதவி மற்றும் 23.05.2016 முதல் திருமாங்கல்யம் செய்வதற்காக 1 சவரன்( 8 கிராம்) 22 காரட் நாணயம்.
திட்டம் 2:
ரூ50000 – நிதி உதவி மற்றும் 23.05.2016 முதல் திருமாங்கல்யம் செய்வதற்காக 1 சவரன்( 8 கிராம்) 22 காரட் நாணயம்.
திட்டத்தில் பயன்பெறுவதற்கான தகுதிகள்:
திட்டம் 1:
கல்வித் தகுதி தேவை இல்லை.
திட்டம் 2:
- பட்டதாரிகள் கல்லூரியிலோ அல்லது தொலதூரக்கல்வி மூலமோ அல்லது அரசால் அங்கீகாரிக்கப்பட்ட திறந்தவெளி பல்கலைக் கழகங்களிலோ படித்து தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்.
- பட்டயப் படிப்பு (Diploma Holder) எனில் தமிழக அரசின் தொழில்நுட்பக் கல்வி இயக்குநகரத்தால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் படித்து தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்.
பொது
- ஆதரவற்ற பொண்கள்.
- வருமான வரம்பு ஏதும் இல்லை.
- திருமணத் தேதியன்று மணமகளுக்கு 18 வயது நிரம்பியிருக்க வேண்டும் உச்ச வயது வரம்பு இல்லை.
சமர்ப்பிக்க வேண்டிய சான்றுகள்:
திட்டம் 1:
- சட்டமன்ற உறுப்பினர் பாராளுமன்ற உறுப்பனாரிடமிருந்து ஆதரவற்றோர் சான்று பெற்று வழங்க வேண்டும்
- தாய் தந்தை இறப்புச் சான்று வழங்க வேண்டும்
- விண்ணப்பதாரரின் வயது சான்றிதழ்
திட்டம் 2:
பட்டப்படிப்பு படித்தவர்கள் கல்லூரிகள் தொலைதுரக்கல்வி அரசால் அங்கீகாரிக்கப்பட்ட திறந்தவெளி பல்கலைக்கழகங்களில் படித்து தேர்ச்சி பெற்ற சான்றிதழ்களின் நகல் மற்றும் பட்டயப் படிப்பு படித்தவர்கள் (Diploma Holder) எனில் தமிழக அரசின் தொழில்நுட்ப கல்வி இயக்குநகரத்தால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் படித்து தேர்ச்சி பெற்ற சான்றிதழ்களின் நகல்.
விண்ணப்பிக்க வேண்டிய கால அளவு:
திருமணத்திற்கு 40 நாட்களுக்கு முன் விண்ணப்பிக்கலாம். சிறப்பு நேர்வுகளில் தக்க காரணங்கள் இருந்தால் திருமணத்திற்கு முதல் நாள் வரை விண்ணப்பிக்கலாம்.
டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி நினைவு கலப்புத் திருமண நிதி உதவித் திட்டம்
திட்டத்தின் நோக்கம்
சமுதாயத்தில் இனப்பாகுபாட்டைக் களைந்து சமநிலையை உருவாக்குதல்.
வழங்கப்படும் உதவி:
திட்டம் 1:
ரூ25000 – வழங்கப்படுகிறது (ரூ.15000 – நிதி உதவி ரூ.10000 – தேசிய சேமிப்புப் பத்திரமாகவும்) மற்றும் 23.05.2016 முதல் திருமாங்கல்யம் செய்வதற்காக 1 சவரன்( 8 கிராம்) 22 காரட் நாணயம்.
திட்டம் 2:
ரூ50000 – வழங்கப்படுகிறது (ரூ.30000 – நிதி உதவி ரூ.20000 – தேசிய சேமிப்புப் பத்திரமாகவும்) மற்றும் 23.05.2016 முதல் திருமாங்கல்யம் செய்வதற்காக 1 சவரன்( 8 கிராம்) 22 காரட் நாணயம்.
திட்டத்தில் பயன்பெறுவதற்கான தகுதிகள்:
கீழ்க்கண்ட இரண்டு வகையான கலப்புத் திருமணங்கள் நிதியுதவி பெற தகுதியானவை.
பிரிவு – 1
புதுமணத் தம்பதியரில் ஒருவர் ஆதிதிராவிடர் அல்லது பழங்குடியினராக இருந்து பிற இனத்தவரை மணந்து கொண்டால் நிதியுதவி வழங்கப்படும்.
பிரிவு – 2
புதுமணத் தம்பதியரில் ஒருவர் முற்பட்ட வகுப்பினராகவும் மற்றொருவர் பிற்படுத்தப்பட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினராக இருந்தால் நிதியுதவி வழங்கப்படும்.
பொது
- வருமான வரம்பு ஏதும் இல்லை
- திருமணத் தேதியன்று மணமகளின் வயது 18 பூர்த்தி அடைந்திருத்தல் வேண்டும் உச்ச வயது வரம்பு இல்லை.
- திருமணத் தேதியன்று மணப்பெண் 18 வயது நிறைவு பெற்றிருக்க வேண்டும் உச்ச வயது வரம்பு இல்லை.
சமர்ப்பிக்க வேண்டிய சான்றுகள்:
திட்டம் 1:
- திருமணப் பத்திரிகை அல்லது திருமண பதிவுச்சான்று.
- மணப்பெண் 10-ஆம் வகுப்பு பள்ளியில் படித்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- மணமகன் மற்றும் மணமகளின் சாதிச்சான்று.
- மணப் பெண்ணின் வயதுச் சான்று.
திட்டம் 2:
பட்டப்படிப்பு படித்தவர்கள் கல்லூரிகள் தொலைதூரக்கல்வி அரசால் அங்கீகாரிக்கப்பட்ட திறந்தவெளி பல்கலைக்கழகங்களில் படித்து தேர்ச்சி பெற்ற சான்றிதழ்களின் நகல் மற்றும் பட்டயப் படிப்பு படித்தவர்கள் (Diploma Holder) எனில் தமிழக அரசின் தொழில்நுட்ப கல்வி இயக்குநகரத்தால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் படித்து தேர்ச்சி பெற்ற சான்றிதழ்களின் நகல்.
விண்ணப்பிக்க வேண்டிய கால அளவு:
திருமணம் முடிந்து 2 வருடங்பளுக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
சத்தியவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டம்
திட்டத்தின் நோக்கம்
சமுதாயத்தில் நலிவுற்ற பெண்கள், ஆதரவற்ற விதவைகள், கணவரால் கைவிடப்பட்ட பெண்கள், உடல் ஊனமுற்ற ஆண் மற்றும் பெண் ஆகியோர் சுயதொழில் செய்து தங்கள் வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக் கொள்ள உதவும் வகையில் தையல் இயந்திரம் இலவசமாக வழங்குதல்.
வழங்கப்படும் உதவி:
தையல் இயந்திரம் மற்றும் உபகரணங்கள்.
திட்டத்தில் பயன்பெறுவதற்கான தகுதிகள்:
- ஆதரவற்ற பெண்கள் விதவைகள், கணவரால் கைவிடப்பட்ட பெண்கள், சமூகத்தில் பாதிக்கப்பட்ட பிற மகளிர் மற்றும் பொருளாதாரத்தில் நலிவுற்ற மகளிர்.
- தையல் தைக்க தெரிந்திருக்க வேண்டும்.
- ஆண்டு வருமானம் ரூ.72,000-க்கு மிகாமல் இருக்க வேண்டும்.
- 20 முதல் 40 வயதுக்குள் இருக்க வேண்டும்.
சமர்ப்பிக்க வேண்டிய சான்றுகள்:
- ஆதரவற்றவர் விதவை, கணவரால் கைவிடப்பட்டவர் என்பதற்கான சான்றிதழ்.
- குடும்ப வருமானச் சான்றிதழ்.
- வயதுச் சான்றிதழ்.
- விண்ணப்பதாரர் தையல் தெரிந்தவர் என்பதற்கான சான்றிதழ்.
- சாதி சான்றிதழ்.
- விண்ணப்பதாரரின் புகைப்படம்.
முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு தட்டம்
திட்டத்தின் நோக்கம்
பெண் சிசுக் கொலையை அறவே ஒழித்தல், ஆண் குழந்தையை மட்டுமே விரும்பி ஏற்கும் நிலையினை மாற்றுதல், பெண் கல்வியினை ஊக்கப்படுத்துதல் போன்ற பெண் குழந்தைகளின் நலனை கருத்தில் கொண்டு, முதன் முதலில் 1992ஆம் ஆண்டு புரட்சி தலைவி டாக்டர் ஜெயலலிதா பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்டது.
திட்டம் பற்றிய விவரங்கள்
திட்டம் – 1
இத்திட்டத்தின் கீழ் 01.08.2011 அன்றோ அல்லது அதற்கு பிறகோ பிறந்து குடும்பத்தில் ஒரே பெண் குழந்தை மட்டும் இருப்பின், அப்பெண் குழந்தையின் பெயரில் நிலையான வைப்புத் தொகையாக ரூ.50,000, தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்தில் முதலீடு செய்யப்படுகிறது, இந்த வைப்புத் தொகையின் இரசீது நகல் பெண் குழந்தையின் குடும்பத்திற்கு வழங்கப்பட வேண்டும்.
திட்டம் – 2
இத்திட்டத்தின் கீழ் 01.08.2011 அன்றோ அல்லது அதற்கு பிறகோ பிறந்து, குடும்பத்தில் இரண்டு பெண் குழந்தைகள் மட்டும் இருப்பின் ஒவ்வொரு பெண் குழந்தையின் பெயரிலும் நிலையான வைப்புத் தொகையாக ரூ.25,000, தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்தில் முதலீடு செய்யப்படுகிறது, இந்த வைப்புத் தொகையின் இரசீது நகல் பெண் குழந்தையின் குடும்பத்திற்கு வழங்கப்பட வேண்டும்.
திட்டத்தில் பயன் பெறுவதற்கான தகுதிகள்
( அரசானை எண்.533,சந(ம)சதிது, நாள்.13.10.1992, அரசானை எண்.199, ,சந(ம)சதி(சந-5), நாள்.31.12.2001, அரசானை எண்.55 சந(ம)சதிது, நாள்.11.04.2005 மற்றும் அரசானை எண்.51,சந(ம)சதிது, நாள்.14.10.2014)
- 35 வயதுக்குள் பெற்றோரில் ஒருவர் கருத்தடை அறுவை சிகிச்சை செய்திருக்க வேண்டும்.
- குடும்பத்தில் ஒன்று அல்லது இரண்டு பெண் குழந்தைகள் மட்டுமே இருக்க வேண்டும்
- ஆண் குழந்தை இருக்கக் கூடாது. பின்னாளில் ஆண் குழந்தையை தத்து எடுத்துக் கொள்ளவும் கூடாது.
- விண்ணப்பிக்கும் போது பெற்றோர் அல்லது அவர்களின் பெற்றோர்கள் தமிழகத்தில் பத்தாண்டுகள் வசித்தவராக இருத்தல் வேண்டும்.
- திட்டம் 1:ன் கீழ் ஒரு பெண் குழந்தை மட்டும் இருப்பின் அக்குழந்தை பிறந்த 3 ஆண்டிற்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
- திட்டம் 2:ன் கீழ் இரண்டு பெண்குழந்தைகள் மட்டும் எனில். இரண்டாவது குழந்தை பிறந்த 3 ஆண்டிற்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
- ஆண்டு வருமானம் ரூ.72,000-க்கு மிகாமல் இருக்க வேண்டும்.
இணைக்க வேண்டிய சான்றுகள்
(அரசானை எண்.199, ,சந(ம)சதி(சந-5), நாள்.31.12.2001)
- பிறப்புச் சான்று (மாநகராட்சி வட்டாசியர் அலுவலகம், நகராட்சியர் அலுவலகம்).
- பெற்றோரின் வயது சான்று (பிறப்புச் சான்று, பள்ளிச்சான்று அரசு மருத்துவரின் சான்று).
- குடும்ப நல அறுவை சிகிச்சை சான்று (சம்மந்தப்பட்ட அரசு அல்லது தனியார் மருத்துவமனை).
- வருமான சான்று (வட்டாட்சியர் அலுவலகம்).
- ஆண் குழந்தை இல்லை என்பதற்கான சான்று ( விரிவாக்க அலுவலர் (சமுக நலம்) அல்லது ஊர் நல அலுவலர், சென்னை மாவட்டம் மட்டும்- வட்டாட்சியர் அலுவலகம்).
- இருப்பிடச் சான்று – வட்டாட்சியர் (விண்ணப்பிக்கும் போது பெற்றோர் அல்லது அவர்களின் பெற்றோர்கள் தமிழகத்தில் பத்தாண்டுகள் வசித்தவராக இருத்தல் வேண்டும்).
விண்ணப்பிக்கும் முறை
அந்தந்த மாவட்டங்களில் உள்ள இ-சேவை மையம் மூலம் அனைத்து சான்றுகளுடன் விண்ணப்பிக்க வேண்டும்.
மூன்றாம் பாலினர் நலம்.
தமிழ்நாடு மூன்றாம் பாலினர் நலம்
திட்டத்தின் நோக்கம்
மூன்றாம் பாலினர்களுக்கான சமூக மற்றும் பொருளாதார உதவிக்கான நலத் திட்டங்களை வகுத்து செயல்படுத்துதல்.
வழங்கப்படும் உதவி:
- மூன்றாம் பாலினா் என்பதற்கான அடையாள அட்டை.
- ஆதரவற்ற 40 வயதிற்கு மேற்பட்ட மூன்றாம் பாலினருக்கு மாதாந்திர சிறப்பு ஓய்வூதியமாக ரூ.1000 – வழங்குதல்.
- சுயத் தொழில் தொடங்கவதற்கான மானியம்.
திட்டத்தில் பயன்பெறுவதற்கான தகுதிகள்:
- தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும்.
- தமிழ்நாடு மூன்றாம் பாலினர் நல வாரியத்தினால் வழங்கப்படும் அடையாள அட்டை வைத்திருத்தல் வேண்டும்.
குடும்ப வன்முறையிலிருந்து பெண்களை பாதுகாக்கும் சட்டத்தை செயல்படுத்துதல்
குடும்ப வன்முறையிலிருந்து பெண்களை பாதுகாக்கும் சட்டத்தின்கீழ் குடும்ப உறவிலுள்ள நபர்களால் வன்முறையை எதிர்கொள்ளும் பெண்கள் வன்முறையை சம்பந்தமான புகார்களை மாவட்ட சமூக நல அலுவலகத்திலுள்ள பாதுகாப்பு அலுவலரை அணுகி நீதிமன்றத்தின் மூலம் வழக்கு பதிவு செய்து குறைந்தபட்சம் 60 நாட்களுக்குள் தீர்வு பெறலாம்.
இச்சட்டத்தின் கீழ் பெற இயலும் நிவாரணங்களானது
- பாதுகாப்பு ஆணை.
- இருப்பிட ஆணை.
- பராமரிப்பு ஆணை.
- குழந்தை பாதுகாவல் ஆணை.
- பொருளாதார மற்றும் உடல் ரீதியான வன்முறைக்கான இழப்பீடு.
- இலவச தங்குமிடம்.
- ஆலோசனை.
- சட்ட உதவி.
பெற்றோர்கள் மற்றும் மூத்த குடிமக்கள் நலன் பராமரிப்புச் சட்டம் 2007
பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் என்றாலும், தங்களை தங்களால் பராமரித்துக் கொள்ள இயலாத பெற்றோர் மற்றும் 60 வயதை கடந்த மூத்த குடிமக்கள் என்றாலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அதற்கென்று அமைக்கப்பட்டுள்ள தீர்ப்பாயத்தில் மனு கொடுத்திருப்பின் அதன்பேரில் விசாரணைகள் மேற்கொள்ளவும், நிவாரணங்கள் பெறவும் நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
இச்சட்டத்தின் கீழ் பெற இயலும் நிவாரணங்களானது
- பாதிக்கப்பட்ட முதியோரின் மகன்,மகள்,பேரன், பேத்தி சொத்துக்களை அடைய உள்ள பிற வாரிசுகள் முதியோரை பராமரிக்க கடமைப்பட்டவர் ஆவர்.
- பாதிக்கப்பட்ட முதியோர் இழந்த சொத்து, பிற உடைமைகளை மீட்டுத்தரப்படும்.
- பாதுகாப்பு மட்டும் தேவைப்படின் தங்குமிட ஏற்பாடு செய்து தரப்படும்.
- அந்தந்த பகுதி கோட்டாட்சியர் தலைமையிலான தீர்ப்பாயம் விண்ணப்பத்தை விசாரிக்கும்.
- சமரசத்திற்கு வழிவகை உள்ளது.
- தீர்ப்பை மீறுவோர் தண்டிக்கப்படுவர்.
வரதட்சணை தடுப்புச் சட்டம் 1961- ஐ செயல்படுத்துதல்
வரதட்சணை தடுப்புச் சட்டம் இயற்றப்பட்டு அதற்கான சட்ட விதிகள் 2004ஆம் ஆண்டு தமிழக அரசால் ஏற்படுத்தப்பட்டது. திருமண வாழ்வில் பொருளாதார வன்முறை, பிடிவாத சீதனத் கோரிக்கையால் ஏற்படும் உயிரிழுப்பு, போன்ற துன்புறுத்தல்களிலிருந்து பெண்களை பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டது.
- வரதட்சணையாக நகையோ, பணமோ, பொருளோ பிற மதிப்பு வாய்ந்தவற்றை வேண்டிப் பெறுவது சட்டப்படிக் குற்றமாகும்.
- வரதட்சணை கொடுக்க அல்லது வாங்க போடப்படும் உடன் படிக்கை செல்லாததாகும்.
- அந்தந்தப் பகுதி அனைத்து மகளிர் காவல் நிலையம் அல்லது வரதட்சணை தடுப்பு அலுவலரிடம் தெரிவிக்கலாம்.
- வரதட்சணை வேண்டிய குற்றத்திற்கு அல்லது வரதட்சணை பெற்றதற்கு தண்டனையுடன் அபராதம் சட்டப்படி விதிக்கப்படும்.
பணியிடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்
( தடுப்பு, தடை மற்றும் தீர்வுச் சட்டம். 2013)
பணியிடங்களில் பாலியல் வன்முறையற்ற பாதுகப்ப்பான சூழலை உறுதிப்படுத்தும் வகையில் கொண்டு வரப்பட்ட இம்முக்கியத்துவம் வாய்ந்த சட்டம் நடைமுறையில் பெண்கள் பணிபுரியும் இடங்களை அவர்களுக்கான பாலியல் வன்முறையற்றத் தளமாக உருவாக்குவதை நேக்கமாக கொண்டது.
- பாலியல் துன்புறுத்தல் என்பது பாலியல் ரீதியாக பேசுவது அரைகுறையான, நிர்வாண புகைப்படங்களை காட்டுவது, தொட்டுப்பேசுவது, பாலியல் செயலை வற்புறுத்துவது.
- பணியிடத்தில் உள்ளக புகார் குழு அமைக்கப்பட்டிருக்க வேண்டும்.
- பத்து நபர்களுக்கு குறைவாக பணியாளர்கள் உள்ள பணியிடங்களில் புகார்கள் உள்ளுர் புகார் குழுவிடம் அளிக்க வேண்டும்.
- சம்பவம் நடந்த 3 மாதத்திற்குள் புகார் அளிக்க வேண்டும்.
குழந்தை திருமண தடைச் சட்டம் 2006 செயல்படுத்துதல்
18 வயது நிறைவடையாத பெண்ணும், 21 வயது நிறைவடையாத ஆணும் செய்யும் குழந்தை திருமணத்தை தடுக்கும் பொருட்டு 2006ஆம் குழந்தை திருமண தடுப்புச் சட்டம் இயற்றப்பட்டது.
- குழந்தை திருமணம் சட்டப்படி செல்லத்தக்கதல்ல.
- ஏற்னவே நடைபெற்ற குழந்தை திருமணத்தை செல்லாத்தாக்குதல்
- குழந்தைத் திருமணத்திற்கு உடந்தையாக இருந்த பெற்றோர், திருமணத்தை நடத்தியவர், சம்மந்தப்பட்டவர் என அனைவர் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க இயலும்.
- குழந்தைத் திருமணம் குறித்த புகார்களை அந்தந்த மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகு (அ) 1098 என்ற தொலைபேசி எண் (அ) மாவட்ட சமூகநல அலுவலகத்தில் புகார் தெரிவிக்கலாம்.
- பாதிக்கப்பட்ட குழந்தைக்கு வேண்டிய, தங்குமிடம், ஆலோசனை, சிறந்த நலனுக்கான அனைத்து சேவையும் அளிக்கப்படும்.
புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் சத்துணவு திட்டத்தின் கீழ் பயனடையும் 1 முதல் 8ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவியருக்கு விலையில்லா சீருடை வழங்கும் திட்டம்.
சமுக நலத்துறையின் மூலம் செயல்படுத்தப்படும் இத்திட்டத்தில் 1ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவ மாணவியர்களுக்கு ஒரு வருடத்திற்கு நான்கு இணை விலையில்லா சீருடைகள் வழங்கப்பட்டு வருகின்றது.
அரசு பணிபுரியும் மகளிர் விடுதி
திட்டத்தின் நோக்கம்
குடும்பத்தை விட்டு வெளியூரில் பணிபுரியும் குறைந்த மற்றும் நடுத்தர வருவாய் பெறும் மகளிருக்கு உணவுடன் பாதுகாப்பான தங்கும் வசதி அளிப்பது.
வழங்கப்படும் உதவி:
தங்கும் வசதிகள் அளிப்பது, உணவுச் செலவினம் மற்றும் மின்கட்டணச் செலவுகளை பகிர்மான அடிப்படையில் மேற்கொள்வது. உள்ளுறைவோர் வாLகையாக சென்னையில் மாதாமொன்றுக்கு ரூ.300-ம் இதர மாவட்டங்களில் ரூ.200-ம் செலுத்த வேண்டும்.
திட்டத்தில் பயன்பெறுவதற்கான தகுதிகள்:
சென்னையில் ரூ.25,000-க்குள்ளு, இதர மாவட்டங்களில் ரூ.15,000-க்குள்ளும் மாத ஊதியம் பெறும் பணிபுரியம் மகளிர்.
சமர்ப்பிக்க வேண்டிய சான்றுகள்:
பணிபுரியும் அலுவலகத்திலிருந்து வழுங்கப்பட்ட சான்று.
- விண்ணப்பதாரரின் வருமானச் சான்றிதழ்.
- விடுதி உள்ள இடத்தில் அல்லாமல் வேறு இடம் அல்லது மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்ற சான்றிதழ்.
குறிப்பு. செங்கல்பட்டு மாவட்டத்தில் 2 விடுதிகள் துவங்கப்பட்டு செயல் படுத்தப்பட்டு வருகின்றது.
சகி – (ஒன் ஸ்டாப் சென்டர்)
வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு அவசர உதவி தேவைப்படும் போது உதவிக் கரம் நீட்டும் வகையில் 24 மணி நேரம் செயல்படும் பெண்களுக்கான கட்டணமில்லா தொலைபேசி உதவித் திட்டம் (women Help Line)செயல்பட்டுவருகிறது. இவ்வுதவித் திட்டத்தில், அவர்களுக்கு தேவையான மீட்பு மற்றும் பரிந்துரையை உரிய நிறுவனங்களான காவல் துறை, மருத்துவ விரைவு ஊர்தி சேவை, மாவட்ட சட்ட ஆணைக்குழு, பாதுகாப்பு அலுவலர், ஆகியோர் மூலம் உதவியும் தகவலும் பெற்றுக்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேலும் தகுந்த தேவையான ஆதரவு தரக்கூடிய பணிகளை தேர்ந்தெடுக்கவும், அரசாங்கத் திட்டங்கள் மற்றும் பணிகளை, பாதிக்கப்பட்ட பெண்கள் அவர்கள் இருக்கும் இடம் மற்றும் பணிபுரியும் இடத்திலேயே பெற்றுக் கொள்ளவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இத்திட்டம், சகி –(ஒன் ஸ்டாப் க்கிரைசஸ் சென்டர்) உடன் இணைந்து செயல்படுத்தப்பட்ட வருகின்றது.
சமுதாய உதவி மையம்
பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பொது மக்களிடமிருந்து வரப்பெரும் புகார் மனுக்களை பெற்று தகுந்த நடவடிக்கை எடுத்து பயன் பெறும் வகையில் மாவட்ட சமூகநல அலுவலகத்தில் சமுதாய உதவி மையம் செயல்படுத்தப்பட்டு வருகின்றது.
முகவரி
மாவட்ட சமூக நல அலுவலகம்,
சி.ஆர்.சி குறுவள மைய கட்டிடம்,
ஊராட்சி ஓன்றிய தொடக்கப்பள்ளி வளாகம்,
85 ஆலப்பாக்கம்,
செங்கல்பட்டு – 603003
தொலைபேசி எண்- 044-27420035
மின்னஞ்சல் முகவாி – dswochengalpet[at]gmail[dot]com