மாவட்ட ஆட்சியர் அலுவலகம்
செங்கல்பட்டு, மாவட்ட ஆட்சியர் அலுவலகமானது, செங்கல்பட்டு மாவட்ட நிர்வாக நீதிபதி மற்றும் மாவட்ட ஆட்சியரின் தலைமையின்கீழ் செயல்பட்டு வருகிறது. மாவட்டத்தின் பொது நிர்வாகம், சட்டம் மற்றும் ஒழுங்கு, மற்றும் நலத்திட்ட நிர்வாகம் ஆகியன மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது.
மாவட்ட ஆட்சியர் அலுவலகமானது இரண்டு முக்கிய பிரிவுகளை உள்ளடக்கியள்ளது. அவற்றில் ஒரு பிரிவான வருவாய் நிர்வாகமானது மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையின்கீழும், மற்றொரு பிரிவான வளர்ச்சி திட்டங்கள் திட்ட இயக்குநர். மாவட்ட ஊரக திட்ட முகமையின் கீழ் செயல்பட்டு வருகிறது.
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கும் பல்வேறு பிரிவுகள்
அ-பிரிவு – அனைத்து நிலை அலுவலர்கள் பணியமைப்பு
ஆ-பிரிவு – நில மாற்றம், நிலம் கையகப்படுத்துதல்,நில மாற்றம் / பட்டா முரண்பாடு களைதல், நில சீர்திருத்தம் சம்மந்தப்பட்ட கோப்புகள்
டி-பிரிவு -ஆவணங்கள்
இ-பிரிவு – தேர்தல்
ஜெ-பிரிவு – ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம்
எம்-பிரிவு – சட்டம் மற்றும் ஒழுங்கு
க்யூ-பிரிவு – கனிம வளம்
ஆர்-பிரிவு – ஓய்வூதியம் மற்றும் வீட்டு கடன்
எஸ்-பிரிவு – பொது விநியோக அமைப்பு, குடிமைப் பொருள்கள்
ட்டி-பிரிவு – பணியாளர் ஊதியம்
யு-பிரிவு – அரசு தேர்வுகள் நடத்துதல், மக்கள் தொகை கணக்கெடுப்பு, நகர்ப்புற நிலவரி, etc
வி-பிரிவு – கலால் மற்றும் ஆயத்தீர்வை
டபிள்யூ-பிரிவு – பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலன்
எக்ஸ்-பிரிவு – சமூக பாதுகாப்புத் திட்டங்கள் / அனைத்து மனு நீதி மனுக்கள், சமூக பாதுகாப்புத்திட்டங்கள்
ஒய் -பிரிவு – முக்கிய பிரமுகர்கள் வருகை
டி.எம்-பிரிவு – பேரிடர் மேலாண்மை
டி(பி) – பஞ்சாயத்து
உதவி இயக்குநர் (பஞ்சாயத்து) – பஞ்சாயத்து நடைமுறைகள்
கூடுதல் இயக்குனர்(தணிக்கை) – ஆடிட் மற்றும் ஹை லெவல் கமிட்டி
நேர்முக உதவியாளர் (சிறுசேமிப்பு) – சிறுசேமிப்பு
நேர்முக உதவியாளர் (சத்துணவு) – பள்ளிகளில் சத்துணவு வழங்குதல்
திட்ட அலுவலர் – ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து
உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) – பேரூராட்சிகள் நடைமுறைகள்
உதவி இயக்குநர் (நில அளவை) – நில அளவை மற்றும் பதிவேடுகள்